உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெண்ணிடம் அத்துமீறல்; போலீசாரை தாக்க முயற்சி; ஈரோடு அருகே அடாவடி கான்ஸ்டபிள் கைது

பெண்ணிடம் அத்துமீறல்; போலீசாரை தாக்க முயற்சி; ஈரோடு அருகே அடாவடி கான்ஸ்டபிள் கைது

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம், தங்கம் நகரை சேர்ந்தவர் ராணி, 27; அத்தாணி, சவுண்டப்பூரை சேர்ந்தவர் கார்த்தி, 38; பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிகிறார்.ஆனால், ஒன்றரை ஆண்டாக பணிக்கு செல்லாமல் விடுப்பில் (விட்டோடி) உள்ளார். இவருக்கும் ராணிக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கருத்து வேறுபாட்டால் இருவரும் சமீபத்தில் பிரிந்து விட்டனர். இந்நிலையில் கான்ஸ்டபிள் கார்த்தி, குடிபோதையில் ராணி வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று காலை அவர் வீட்டுக்கு குடிபோதையில் சென்று தகராறு செய்துள்ளார். இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு, ராணி தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற போலீசார், கார்த்தியை பிடிக்க முயன்றபோது, அவர்களையும் தகாத வார்த்தை பேசி மிரட்டியுள்ளார். இதனால் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தை பேசியது, பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கார்த்தியை கைது செய்தனர். பவானி கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பவானி கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை