உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஹஜ் சேவை பணிக்கு அழைப்பு

ஹஜ் சேவை பணிக்கு அழைப்பு

ஈரோடு:மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு, தனது சுற்றறிக்கையில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ள தமிழக பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவுதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. தற்காலிக பணி, 2027 ஏப்., 3 முதல் ஜூலை, 25 வரை இருக்கும்.மத்திய, மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவப்படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலர்கள், மத்திய, மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள், விண்ணப்பிக்கலாம்.இப்பணிக்காக நிகர்நிலை மூலம் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமன முறையை மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியான, www.hajcommitte.gov.in ல் அறியலாம். வரும், 27ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ