உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் காங்.,பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை

ஈரோட்டில் காங்.,பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை

ஈரோடு : ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில், இணையதளம் மூலம் பூத் கமிட்டி உறுப்பினர்களை இணைக்கும் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜேஷ்ராஜப்பா, மண்டல தலைவர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைவர்கள் ரவி, ராஜேந்திரன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இணைய தளத்தில் காங்., கட்சி மீது ஆர்வமுள்ளவர்களை இணைப்பது தொடர்பாக விளக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பது. அதில் இளைஞர்களை அதிகமாக இணைப்பது என முடிவு செய்தனர்.சிறுபான்மை பிரிவு ஜவஹர்அலி, மாதேஷ், கனகராஜ், வின்சென்ட், விஜய்கண்ணா, பிரபு, தீபா, கிருஷ்ணவேணி, சூரியா சித்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை