உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பாதயாத்திரையாக பக்தர்கள் பயணம்

முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பாதயாத்திரையாக பக்தர்கள் பயணம்

காங்கேயம்: ஆறுபடை வீடுகளில் முதன்மையானதும், புகழ்பெற்றதுமான பழநி பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு செல்ல, பக்தர்கள் காங்கேயம் வழியாக கூட்டம் கூட்டமாக பாத யாத்திரை பயணம் மேற்கொண்டனர்.தமிழ் கடவுள் முருகன் குடி கொண்டுள்ள ஆறுபடை வீடுகளுக்கும் மார்கழி, தை மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்வது தொன்று தொட்டு நடந்து வருகிறது. ஆறுபடை வீடுகளில் முதன்மை பெற்றதும், பாலகனாக முருக கடவுள் காட்சி தருவதும் பழநியில் அமைந்துள்ள இக்கோவிலின் சிறப்பாகும்.முருகனுக்கு ஆண்டுதோறும் மார்கழி, தை மாதத்தில் மாலை அணிந்து விரதமிருந்து பக்கதர்கள், தங்கள் ஊர்களில் இருந்து பாத யாத்திரையாக காவடி சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சார்ந்த முருக பக்தர்கள் குடும்பத்துடன் பாத யாத்திரையாக காங்கேயம் வழியாக செல்வது வழக்கம்.இந்தாண்டும் லட்சக்கணக்கில் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட காவடி, முருகன் சிலைகளுடன் பாத யாத்திரையாக வழிெநடுகிலும் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை