உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எண்ணெய் நிறுவனங்கள் தொடர் ஆய்வு நடத்துமா?

எண்ணெய் நிறுவனங்கள் தொடர் ஆய்வு நடத்துமா?

ஈரோடு: ஈரோடு மாநகரப் பகுதியில் விதிமீறி காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதை தடுக்க தொடர் ஆய்வுகளை, எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். ஈரோடு மாநகரில் 200க்கும் மேற்பட்ட உணவகங்கள், டீக்கடை, பேக்கரிகள் செயல்படுகின்றன. கமர்ஷியல் சிலிண்டர் விலை அதிகமென்பதால், பல கடைகளில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் தாறுமாறாக உயர்த்தப்படும் விலையால், மக்கள் அவதிப்படும் நிலையில், சிலிண்டர்களை வணிக நோக்கில் பயன்படுத்துவது மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. சிலிண்டர் பயன்பாடு குறித்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கே உண்டு. கண்காணிப்பு பணியில் சுணக்கம் காட்டுவதால், எவ்வித அச்சமுமின்றி வீட்டு உபயோக சிலிண்டர்களை, வணிக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ஈரோடு மாநகரப் பகுதியில் ஆயில் நிறுவனத்தினர் தொடர் ஆய்வு நடத்த வேண்டும். இதன்மூலம் பல இடங்களில் விதிமீறி பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்ய வாய்ப்புண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை