உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொது இடத்தில் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கல்

பொது இடத்தில் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கல்

ஈரோடு: பொங்கல் பண்டிகை பரிசுத்தொகுப்பு பெறுவோர், கூட்ட நெரிசலில் சிக்காமல் தவிர்க்க, டோக்கன் வழங்கப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 7.66 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி கார்டு வைத்துள்ளனர். இவர்களில் மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் உட்பட குறிப்பிட்ட தகுதி கொண்ட கார்டுதாரர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. ரேஷன் கடை பணியாளர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான இடங்களில் பொது இடம், கோவில், குறிப்பிட்ட நபர்களின் வீடுகளில் வைத்தே டோக்கன் வழங்கப்பட்டது. ஈரோடு பெரியசடையம்பாளையம், டீச்சர்ஸ் காலனி சாலை, எஸ்.கே.சி., சாலை பகுதி உட்பட பல இடங்களில் பொது இடத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் அமர்ந்து, டோக்கன் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை