உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாளவாடியில் யானையை கொன்று தந்தம் கடத்தல்

தாளவாடியில் யானையை கொன்று தந்தம் கடத்தல்

சத்தியமங்கலம் : சத்தி புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, தாளவாடி அருகே கும்டாபுரத்தில், இரு நாட்களுக்கு முன் வனத்துறையினர் வனத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டார். இதில் இறந்து போனது, ௧௮ வயதான ஆண் யானை என்பது தெரிய வந்தது. சாவுக்கான காரணத்தை உறுதி செய்ய, முக்கிய உடல் பாகங்களை எடுத்துக் கொண்டு, அதே இடத்தில் பிற விலங்குகளுக்கு இரையாக, உடலை போட்டு சென்றனர். தந்தங்களுக்காக யானையை கொன்றிருக்கலாம் எனத் தெரிகிறது. குற்றவாளிகளை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ