உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தெரு நாடகம்

ஈரோட்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தெரு நாடகம்

ஈரோடு:மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்று துறை உதவியுடன், தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்று துறை, கடமலைக்குண்டு லா தொண்டு நிறுவனம் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் ஆறு இடங்களில், விழிப்புணர்வு தெருமுனை பிரசார நாடகங்களை நடத்தினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள், சுற்றுச்சூழல் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சுற்றுச்சூழல் கருத்துகள் அடங்கிய துண்டு பிரசுரம், துணி பை அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, லா தொண்டு நிறுவன செயலாளர் வெங்கடேசன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை