உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு நந்தா கலை கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு ஆரம்பம்

ஈரோடு நந்தா கலை கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு ஆரம்பம்

ஈரோடு:ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. நந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்து பேசினார். கல்லுாரி முதல்வர் மனோகரன் வரவேற்றார். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி மற்றும் முதன்மை கல்வி நிர்வாக அதிகாரி ஆறுமுகம் ஆகியோர், மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் வரவேற்று, வாழ்த்தி பேசினார். தமிழ் துறைத்தலைவர் கோமதி சுப்பிரமணியம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை செய்த, கல்லுாரி நிர்வாக அலுவலர் சீனிவாசன், துறை தலைவர் மற்றும் பேராசிரியர்களை, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை