உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் சாவில் மர்மம்எஸ்.பி.,யிடம்தந்தை புகார்

மகன் சாவில் மர்மம்எஸ்.பி.,யிடம்தந்தை புகார்

ஈரோடு: ஜம்பை கூலித்தொழிலாளியின் மகன் சாவில் மர்மம் இருப்பதாக, ஈரோடு எஸ்.பி.,யிடம் பெற்றோர் புகார் மனு கொடுத்தனர்.பவானி தாலுகா, சின்னமோள பாளையம் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் முனியப்பன்(35); கூலித்தொழிலாளி. இவரது மகன் சூர்யா, காந்தி நகர் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தான். 23ம் தேதி, ஆற்றுக்கு சென்றான். அதன்பின் சூர்யா வீடு திரும்பவில்லை. மறுநாள் சூர்யாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சூர்யா நீரில் மூழ்கி இறந்ததாக, பவானி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.நேற்று, முனியப்பன் தனது குடும்பத்தினருடன், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். தனது மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவனது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை