உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காலிங்கராயனில் தண்ணீர் திருட்டு

காலிங்கராயனில் தண்ணீர் திருட்டு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் வாய்காலில், கள்ளத்தனமாக தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், லட்சுமி நகர் பகுதியில் லாரி சர்வீஸ் ஸ்டேஷன் கழிவு நீரும், வாய்க்காலில் கலக்கிறது.ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக 15 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. வாய்க்காலில் ஆண்டு முழுவதும் சாயக்கழிவு நீர் கலக்கிறது.அத்துடன், பவானி லட்சுமி நகர் பகுதியில் உள்ள, வாகன சர்வீஸ் ஸ்டேஷன்கள், காலிங்கராயன் வாய்க்கால் நீரை திருட்டுத்தனமாக பயன்படுத்துகின்றன.சர்வீஸ் ஸ்டேஷனில் இருந்து கழிவு நீர், மீண்டும் வாய்க்காலில் கலக்கிறது. விவசாயத்துக்காக கள்ளத்தனமாக பம்பு செட் வைத்தும் தண்ணீரை உறிஞ்சுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்