உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மண்டல அளவிலான விளையாட்டு வெள்ளகோவில் மாணவன் வெற்றி

மண்டல அளவிலான விளையாட்டு வெள்ளகோவில் மாணவன் வெற்றி

வெள்ளகோவில்: வெள்ளகோவில் ஏ.என்.வி., மெட்ரிக் பள்ளி மாணவன் தெற்கு மண்டல அளவிலான விளையாட்டுப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தார்.திருப்பூர் பாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளி மூலம் தெற்கு மண்டல அளவிலான விளையாட்டுப்போட்டி சுபா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது.இப்போட்டியில் 40ம் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 55க்கும் மேற்பட்டவர்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர். இதில் ஏ.என்.வி., மெட்ரிக் பள்ளி மாணவன் அரவிந்த் முதலிடத்தைப் பெற்று சாதனை புரிந்தார்.இதே மாணவன், 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தை பெற்றார். அரவிந்துக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் சான்றிதழ்களை பாரத் பள்ளி வழங்கியது.மாணவன் அரவிந்தை ஏ.என்.வி., பள்ளி நிர்வாகம், முதல்வர் உமாமகேஷ்வரி மற்றும் உறுப்பினர்கள் பாராட்டி கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ