உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளாட்சி தேர்தலால் யூனியனில் இடமாற்றம்

உள்ளாட்சி தேர்தலால் யூனியனில் இடமாற்றம்

கோபிசெட்டிபாளையம்: உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 யூனியன் அலுவலகத்தில் மூன்று ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், சத்தி, பவானிசாகர், தாளவாடி ஆகிய 14 பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளன. இவற்றில், 226 பஞ்சாயத்துகள் அடங்கி உள்ளன.உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 1,503 ஓட்டுசாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஈரோடு யூனியனில் 48, மொடக்குறிச்சி 142, கொடுமுடி 51, பெருந்துறை 122, சென்னிமலை 135, அந்தியூர் 121, அம்மாபேட்டை 148, கோபி 134, நம்பியூர் 102, டி.என்.பாளையம் 75, சத்தியமங்கலம் 111, பவானிசாகர் 111, தாளவாடி 72, பவானி யூனியனில் 131 ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன.உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில், யூனியன் அலுவலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய பி.டி.ஓ.,க்கள், ஏ.பி.டி.ஓ.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 யூனியன் அலுவலகத்திலும் பணியாற்றும் 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை