உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வன விலங்கு வார விழாமாணவர்களுக்கு பல்வேறு போட்டி

வன விலங்கு வார விழாமாணவர்களுக்கு பல்வேறு போட்டி

ஈரோடு: வனத்துறை சார்பில், வன விலங்கு வார விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடந்தன.ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, மாவட்ட வன அலுவலர் ஜகந்நாதன் தலைமை வகித்தார்.கோட்ட வன அலுவலர் ரமணன், டாக்டர் செந்தில்குமார், சி.என்.சி., கல்லூரி பேராசிரியர் கமலக்கண்ணன், வனச்சரக அலுவலர்கள் அழகேசன், நாகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து, வன விலங்குகள் பற்றிப் பேசினர்.ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை நடந்தன. மாவட்டம் முழுவதுமுள்ள ஏராளமான பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை