உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மஞ்சள் மண்டி உரிமையாளர் கொலை தனிப்படை அமைத்து தேடுதல் பணி

மஞ்சள் மண்டி உரிமையாளர் கொலை தனிப்படை அமைத்து தேடுதல் பணி

ஈரோடு: மஞ்சள் மண்டி உரிமையாளர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கண்டறிய, மூன்று பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, போலீஸார் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளனர். ஊஞ்சலூர் அருகே குமாரசாமி கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன்(47). இவருக்கு இந்துபாலா (40) என்ற மனைவியும், ஆதவகாங்கேயன்(12), ஆருத்ரகாங்கேயன்(7) என இரு மகன்கள் உள்ளனர். இளங்கோவன் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார். ஈரோட்டில் கே.பி.எம்., என்ற பெயரில் மஞ்சள் மண்டியும், கோவை கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைச் செயலாளராகவும் இருந்தார். இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், ஈரோடு, கொடுமுடி அருகே கவுண்டன்பாளையத்தில் உள்ளன.

நிலத்தை கண்காணிக்க வாரம் ஒருமுறை, இளங்கோவன் கொடுமுடி வருவது வழக்கம். செப்., 24ம் தேதி இளங்கோவன், தனது நான்கு நண்பர்களுடன் குமாரசாமி கவுண்டன்பாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு வந்துள்ளார். 25ம் தேதி காலை, அவர் மன்னாதம்பாளையம் வாய்க்கால் கரையில், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மலையம்பாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்னர். இன்ஸ்பெக்டர்கள் அறச்சலூர் சேகர், பெருந்துறை குணசேகரன், மலையம்பாளையம் கண்ணன் ஆகியோர் தலைமையில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர், பள்ளிபாளையம் பகுதியில் போலீஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை