உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தகராறு

ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தகராறு

ஈரோடு: பயணிகளை ஏற்றுவதில், ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, அடிதடியாக மாறியதால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஈரோடு பஸ் ஸ்டாண்டு அருகே நாச்சியப்பா வீதியில், ஷேர் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்கிருந்து, நகரம் முழுவதுக்கும் 15க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஷேர் ஆட்டோக்களில் ஐந்து பயணிகள் வரைதான் ஏற்றிச் செல்ல அனுமதி உண்டு. ஆனால், ஷேர் ஆட்டோக்களில் 10 முதல் 15 பேர் வரை ஏற்றிச் செல்கின்றனர்.

தவிர, காலை, மாலை நேரத்தில் பஸ் ஸ்டாண்டில், ஆட்களை ஏற்றுவதில் அடிக்கடி தகராறு நடப்பது வாடிக்கையாகி விட்டது. நேற்று மதியம், இரண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளு, அடிதடி ரகளையாக மாறியது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள் மீது இருவரும் உருண்டு, புரண்டனர். பயணிகள் அலறியடித்து ஓடினர். மற்ற ஆட்டோ டிரைவர்கள் சமாதானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ