உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காலாண்டு விடுமுறையால் கொடிவேரியில் கடும் கூட்டம்

காலாண்டு விடுமுறையால் கொடிவேரியில் கடும் கூட்டம்

கோபிசெட்டிபாளையம்: விஜயதசமி விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை என்பதால் கொடிவேரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தமிழகத்தில் சென்ற சில நாட்களுக்கு முன் பரவலாக மழை பெய்தபோதும், பகல் நேரத்தில் அக்னி வெயில் வாட்டுகிறது. ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய இரு நாட்கள் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு அதிகளவில் வருகின்றனர்.பவானிசாகர் அணையில் இருந்து 1,200 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், கொடிவேரி அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. அதிகளவில் தண்ணீர் விழும் இடத்தில் கான்கிரீட் தளம் மற்றும் தடுப்பு கம்பிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. தடுப்பு கம்பி மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்கின்றனர். அணையின் கீழ் பகுதியில் கொட்டும் தண்ணீரில், கோடை வெயிலுக்கு இதமாக குளித்து ஆனந்தமடைந்தனர்.கொடிவேரி அணையின் மேற்பகுதியில் பரிசல் சவாரியும் நேற்று களைகட்டியது. பரிசலில் கூட்டமாக சென்று அணையை சுற்றிப் பார்த்தனர். ஆபத்து நிறைந்த பகுதிக்கெல்லாம் சுற்றுலாப் பயணிகள் சென்றதால், போலீஸார் எச்சரித்து அப்புறப்படுத்தினர்.மீன் கடைகள், கம்மங்கூழ் கடை, ஐஸ்கீரிம் கடைகளில் விற்பனை களைகட்டியது. காதல் ஜோடிகளும் அதிகளவில் காணப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி