உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்களின் தேவைகள் என்ன? பெண் வேட்பாளர் நூதன பிரச்சாரம்

மக்களின் தேவைகள் என்ன? பெண் வேட்பாளர் நூதன பிரச்சாரம்

ஈரோடு:சித்தோடு டவுன் பஞ்சாயத்து 14வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் இதயக்கனி, தே.மு.தி.க., சார்பில் வளர்மதி, சுயேட்சையாக தேன்மொழி, ஸ்ரீவித்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.தே.மு.தி.க., வேட்பாளர் வளர்மதி, பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்களிடம், 'வாக்காளர் தேவை கையேடு' என்ற ஒன்றை வழங்கி வருகிறார்.ஒரு தனி நபருக்கு அரசுத்துறைகள் மூலமாக கிடைக்க வேண்டிய திட்டங்களான ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று , வருமானம், பிறப்பு, இறப்பு, ஜாதிச்சான்றிதழ்கள், குடிநீர், மின் இணைப்புகள், தேசிய அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், சமூக நலபாதுகாப்பு திட்ட உதவிகள் உள்ளிட்ட 16 தேவைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.ஒரு குடும்பத்துக்கு அரசு துறைகள் மூலம் கிடைக்க வேண்டிய, கழிப்பிடம், சாக்கடை வசதி, மருத்துவ வசதி, மின் இணைப்பு, மழைநீர் சேகரிப்பு தொட்டி உள்ளிட்ட 13 தேவைகளை சுட்டிக்காட்டியள்ளார். பொதுவான பிரச்னைகளாக 100 சதவீத கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீர், பாதுகாப்பு, லஞ்சமில்லாத அரசு பணிகள் என்பன உள்ளிட்ட 13 தேவைகளை சுட்டிக் காட்டியுள்ளார்.கடைசியாக, சித்தோடு பகுதிக்கு, தேவையான திட்டங்களாக ரோடு வசதி, போக்குவரத்து வசதி, இலவச பொது கழிப்பிடம், நூலகம், பொழுதுபோக்கு பூங்கா, கொசு ஒழிப்பு உள்ளிட்ட 14 திட்டங்களை கூறியுள்ளார்.பிரச்சாரத்தின் போது, பொதுமக்களிடம் இந்த கையேட்டை வழங்கி, அவர்களுக்கு தேவையான வசதிகளை 'டிக்' செய்து தருமாறு கேட்டு, அதை மீண்டும் வாங்கிக் கொள்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றதும், மக்கள் அளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஒரு வேளை தோல்வியடைந்தாலும், வெற்றி பெற்ற வேட்பாளரிடம் கையேட்டை கொடுத்து, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தப்படும் என, தே.மு.தி.க., வேட்பாளர் வளர்மதி கூறி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை