உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசனுாரில் வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்

ஆசனுாரில் வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்-பட்ட தாளவாடி, ஜீரஹள்ளி, ஆசனூர் உள்ளிட்ட வன சரக பகுதி-களில் யானை, சிறுத்தை, காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளால் பயிர் சேதம் ஏற்படுவது தொடர்கிறது. இது பற்றி, மலைகிராம விவசாயிகள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர். ஆனால், இது நாள் வரை தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில், தாளவாடி நெய்தாளபுரம் பகுதிகளில் காட்டு பன்-றிகள் கூட்டம் கூட்டமாக விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு வன பாது-காப்பு படையினர், காட்டு பன்றிகளை ஏற்றி வந்த வாகனத்தை பிடித்து வனத்துறை அலுவலகம் கொண்டு சென்றனர். மூன்று காட்டு பன்றிகளை அனுமதியின்றி பிடித்ததற்காக, 25,000 ரூபாய் அபராதம் விதிப்பதாக கூறி, 40,000 ரூபாயை வசூல் செய்துள்ளனர். வனத்துறையினர் அபராத தொகை குறைவாக கூறி விட்டு கூடுதலாக லஞ்சம் வாங்கியுள்ளதாக கூறிய விவசா-யிகள், முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில், நேற்று மதியம் முதல் ஆசனூர் வனத்துறை அலுவலகம் முன் முற்றுகை-யிட்டு போராட்டம் நடத்தினர். ஆசனூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.லஞ்சம் வாங்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சத்தி-யமங்கலம் டி.எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கபடும் என கூறி போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ