உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேங்காய் மட்டை மில்லில் தீ

தேங்காய் மட்டை மில்லில் தீ

சத்தியமங்கலம்:தாளவாடி மலையில் அண்ணாநகரில் இளங்கோ என்பவருக்கு சொந்தமான தேங்காய் மட்டை மில் உள்ளது. நேற்று மதியம் மில்லில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து ஆசனுார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தாளவாடியில் இருந்து, 30 கி.மீ., துாரத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள், மில் முழுவதும் எரிந்து சேதமானது. சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் எனத் தெரிகிறது. இதுபோன்ற சம்பவங்களில் அதிக சேதாரங்களை தவிர்க்க, தாளவாடியில் உடனடியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை