உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூட்டிய வீட்டில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

பூட்டிய வீட்டில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

ஈரோடு, நஈரோட்டில், பூட்டிய வீட்டில் ஏ.சி. மிஷின் தீப்பிடித்து எரிந்ததால், வீட்டு உபயோக பொருட்கள் சாம்பலாகின.ஈரோடு சத்தி சாலை ராஜீவ் நகரை சேர்ந்த சக்திவேல் மனைவி மகேஸ்வரி, 65. சொந்த வீட்டில் முதல் தளத்தில் வசிக்கிறார். நீண்ட நாட்களாக இவரது வீட்டு ஏ.சி. மிஷினை பயன்படுத்தவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் ஏ.சி. மிஷினை போட்டு விட்டு வீட்டை பூட்டி வெளியே சென்றார். இந்நிலையில் மிஷினில் தீப்பிடித்து எரிய துவங்கியது. பூட்டிய வீட்டில் இருந்து கரும்புகை அதிகளவில் வெளியேறியது. இதை பார்த்த பொதுமக்கள், ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்கள் மதியம், 1:50 மணிக்கு சென்றனர். பொதுமக்கள் அதற்குள் வீட்டை திறந்து தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இதில் ஏ.சி. மிஷின், கட்டில், மெத்தை, தையல் மிஷின், இரண்டு பீரோக்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி