உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுத்தைகளை பிடிக்க தயக்கம் வனத்துறையினர் மீது வருத்தம்

சிறுத்தைகளை பிடிக்க தயக்கம் வனத்துறையினர் மீது வருத்தம்

புன்செய்புளியம்பட்டி: விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு சிறுத்தை, புன்செய்புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் மலை குன்றில் பதுங்கியுள்ளன. மூன்று கூண்டுகள் வைத்தும் பிடிபடவில்லை. சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட பல முறை வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை. வனத்துறையினரின் அலட்சியமே, சிறுத்தை பிடிபடாததற்கு காரணம் என்று மக்கள், விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:சிறுத்தை பதுங்கியுள்ள மலை அடிவாரத்தில் பெரியகள்ளிப்-பட்டி, மாராயிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில், 50க்கும் மேற்-பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர், சிறுத்தை நடமாட்-டத்தால், குழந்தைகளை வெளியில் விளையாட கூட அனுமதிப்ப-தில்லை. தோட்டங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடிவ-தில்லை. பட்டப்பகலில் சிறுத்தை நடமாடுவதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பல முறை வலியுறுத்தியும், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தயங்குகின்றனர். சிறுத்தைகளை பிடிக்-காவிட்டால் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ