உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகனுடன் பெண் மாயம்

மகனுடன் பெண் மாயம்

ஈரோடு, ஈரோடு அருகே சோலார் புதுார், வெங்கடேஸ்வரா காம்ப்ளக்சை சேர்ந்த கோவிந்தன் மகள் சத்யா, 23; இவரின் கணவர் மகேந்திரன். தம்பதிக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் சத்யா விவாகரத்து பெற்றார். தந்தை கோவிந்தன் வீட்டில் மகனுடன் வசிக்கிறார். சத்யாவுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பதாக கோவிந்தன் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் மகனுடன் சத்யா மாயமாகி விட்டார். தந்தை கோவிந்தன் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி