உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெண் தொழிலாளியிடம் தங்க செயின் பறிப்பு

பெண் தொழிலாளியிடம் தங்க செயின் பறிப்பு

பவானி;சித்தோடு அருகே நசியனுார் பள்ளத்துாரை சேர்ந்தவர் செல்வராணி, 45. நசியனுார் கூட்டுறவு வங்கியில் தற்காலிக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றுகிறார். நேற்று காலை, 11:00 மணியளவில் வீட்டிலிருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு வேலைக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், செல்வராணியின் கழுத்தில் அணிந்திருந்த, 12 கிராம் எடையுள்ள தங்க செயினை பறித்து கொண்டு பறந்தனர்.இதுகுறித்து செல்வராணி கொடுத்த புகார்படி, சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை