உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புளியம்பட்டி பகுதியில் சட்டவிரோத சேவல் சூதாட்டம்

புளியம்பட்டி பகுதியில் சட்டவிரோத சேவல் சூதாட்டம்

புன்செய்புளியம்பட்டி : சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் சேவற்கட்டு மற்றும் சேவல் சூதாட்டங்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட புங்கம்பள்ளி அருகே தடுப்பணையை ஒட்டிய மறைவான இடத்தில், சட்டவிரோத சேவல் சூதாட்டம் நடக்கிறது. இதில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்பதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் சொகுசு கார், விலை உயர்ந்த பைக்கில் வரும் நபர்கள், லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடுகின்றனர். சேவலுக்கு மது கொடுத்து, காலில் கத்தியை கட்டி சூதாட்டம் நடக்கிறது. புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் கண்டித்தால், சேவல் சண்டை நடத்துபவர்கள் குடிபோதையில் மிரட்டுகின்றனர்.மாமூல் பெற்றுக்கொண்டு போலீசார் இதை கண்டு கொள்வதில்லை. விபரீதம் நடக்கும் முன், மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ