உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இறகுபந்து மைதானம் திறப்பு

எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இறகுபந்து மைதானம் திறப்பு

ஈரோடு : ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் போலீசார், பணியாளர்கள் இறகுபந்து விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது.ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு டி.எஸ்.பி., அலுவலகம் எதிரே, விளக்கு வெளிச்சத்துடன் கூடிய இறகு பந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதை நேற்று முன்தினம் எஸ்.பி., ஜவகர் திறந்து வைத்தார். போலீசார், அமைச்சு பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் விளையாட அனுமதிக்கப்படுவர். போலீசார் உடல் ஆரோக்கியம், மனதை புத்துணர்ச்சி பெற செய்யும் விதமாக விளையாட்டில் ஈடுபட செய்யும் விதமாக மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் அதற்கென நெட், வெளியாட்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் மறைப்பு போன்றவை போடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் சங்க கட்டடம் அருகே, வாலிபால் மைதானமும் சீரமைக்கப்பட்டு போலீசார், பணியாளர்கள் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி