உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செவ்வாயில் அதிகரிக்கும் வாகன நெரிசல்; சென்னிமலை போலீசார் தீர்வு காண்பரா?

செவ்வாயில் அதிகரிக்கும் வாகன நெரிசல்; சென்னிமலை போலீசார் தீர்வு காண்பரா?

சென்னிமலை: சென்னிமலை வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள், தென் மாவட்டங்களுக்கு செல்வதால், சென்னிமலை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.பஸ் நிலையத்தை கடந்து பெருந்துறை மற்றும் வெள்ளோடு ரோடு வழியாக செல்லும் வாகனங்கள், தெற்கு மற்றும் மேற்கு ராஜவீதி வழியாக குமரன் சதுக்கம் வழியாக செல்லும் வகையில் ஒரு வழிப்பாதையாக உள்ளது. அதேபோல் குமரன் சதுக்கம் வழியாக பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள், வடக்கு மற்றும் கிழக்கு ராஜவீதி வழியாக செல்கின்றன.ஆனால், சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு கார்களில் வரும் பக்தர்கள், வடக்கு மற்றும் தெற்கு ராஜவீதி வழியாக பார்க் ரோடு வழியாக செல்லாமல், குமரன் சதுக்கத்திலிருந்து ஒரு வழிப்பாதையாக உள்ள மேற்கு ராஜவீதி வழியாக நுழைகின்றனர். இதனால் மேற்கு ராஜவீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன. குறிப்பாக செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் மேற்கு ராஜவீதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு சென்னிமலை போலீசார் உரிய தீர்வு காண, உள்ளூர் வாகன ஓட்டிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை