உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொப்பரை கொள்முதலில் முறைகேடு : நாபெட் மீது கள் இயக்கம் குற்றச்சாட்டு

கொப்பரை கொள்முதலில் முறைகேடு : நாபெட் மீது கள் இயக்கம் குற்றச்சாட்டு

ஈரோடு : கொப்பரை கொள்முதலில் முறைகேடு நடந்து வருவதாக, நாபெட் நிறுவனம் மீது, கள் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது.இதுபற்றி, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வெளியிட்ட அறிக்கை:வெளிச்சந்தையில் கொப்பரை தேங்காய் ஒரு கிலோ, 85 ரூபாய்க்கும் கீழ் உள்ள நிலையில், 108.60 ரூபாய்க்கு நாபெட் மூலம் அரசு கொள்முதல் செய்கிறது. இதில் ஊழல், லஞ்சம், முறைகேடு நிறைந்துள்ளது. விவசாயிகள் இதில் பயனாளிகளாக இல்லை. மாறாக அதிகாரிகள், இடைத்தரகர்கள், வியாபாரிகள் மட்டுமே உள்ளனர்.கொள்முதல் செய்த கொப்பரையை, 65 ரூபாய்க்கு மீண்டும் நாபெட் நிறுவனம் கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்கிறது. இது முற்றிலும் ஏமாற்று வேலை. கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காயை எண்ணெயாக மதிப்பு கூட்டி உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு விற்க, விவசாயிகள் தொடர்ந்து கோரி வருகின்றனர். ஆனால், கொப்பரை தேங்காயில் கூடுதல் சல்பர் இருப்பதால் ஏற்றுமதிக்கு உகந்ததாக இல்லை எனக்கூறி ஏற்றுமதி செய்ய மறுக்கிறது. அவ்வாறு ஏற்றுமதி செய்ய முடியாவிட்டால், கொப்பரை தேங்காய் கொள்முதல் திட்டத்தை கைவிடுவது நாட்டுக்கும், தென்னை விவசாயிகளுக்கும் நல்லதாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி