| ADDED : ஏப் 29, 2024 07:05 AM
ஈரோடு : ஈரோடு, வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, மாணவ--மாணவியர் படிக்கும்போதே வேலை வாய்ப்பை பெற்று தருகிறது. இதுகுறித்து ஈரோடு வேளாளர் கல்வி அறக்கட்டளை தாளாளர் சந்திரசேகர் கூறியதாவது: எங்கள் கல்லுாரி அறக்கட்டளை சார்பில், 50 ஆண்டுக்கும் மேலாக, 10 கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு அங்கமான வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, 25 ஆண்டுகளாக கல்வி சேவை வழங்கி வருகிறது. யு.ஜி.சி., மற்றும் நாக் அமைப்பு, என்.பி.ஏ., என பல்வேறு அமைப்புகளின் விருதுகளை கல்லுாரி பெற்றுள்ளது.பாடத்திட்டத்துடன் லட்சியம், தன்னம்பிக்கையை உருவாக்கி வேலை வாய்ப்பு என்ற இலக்கை அடைய வைப்பதே கல்லுாரியின் மிக முக்கிய நோக்கமாகும்.இதுவரை பல்வேறு முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள், உலகளாவிய தலைசிறந்த நிறுவனங்களில், 25 நாடுகளில் எங்களது கல்லுாரி மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் படிக்கும்போதே தொழில் தொடங்கி, இளம் தொழில் முனைவோராக மாறிடும் வகையில் ஸ்டார்ட்-அப் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் பயோ மெடிக்கல் துறைகளில் இன்டஸ்ட்ரி 4.0 தொழில் நுட்ப யுக்தியை புகுத்தி, மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற ஏதுவாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்.