உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் கண்ணாடி கடையில் ரூ.1.10 கோடி சுருட்டியவர் கைது

ஈரோட்டில் கண்ணாடி கடையில் ரூ.1.10 கோடி சுருட்டியவர் கைது

ஈரோடு, உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகிம்கான், 45; ஈரோட்டில் பார்க் சாலையில் முகிம் கிளாஸ் ஹவுஸ் என்ற கண்ணாடி கடை நடத்தி வருகிறார். கடையில் அதே மாநிலத்தை சேர்ந்த ஆதில்கான், 35, கணக்காளர், சூப்பர்வைசராக வேலை செய்தார். சில மாதத்துக்கு முன், ஆதில்கான் தலைமறைவானார். கடை மற்றும் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, ஆன்லைன் பரிமாற்றம், போலி கையெழுத்திட்ட செக் மூலம், 1.10 கோடி ரூபாய் வரை ஆதில்கான் மோசடி செய்திருப்பது உறுதியானது. மாவட்ட குற்றப்பிரிவில் முகிம்கான் புகார் செய்தார். டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், எஸ்.ஐ., ஜாஸ்மின் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அவரை தேடி வந்த நிலையில், கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பதுங்கி இருந்தது தெரியவந்து, ஆதில்கானை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்துபணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை