உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செவ்வாழை தார் ரூ.1,020க்கு ஏலம்

செவ்வாழை தார் ரூ.1,020க்கு ஏலம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 5.65 லட்சத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், 2,375 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் கதளி கிலோ, 58 ரூபாய், நேந்திரன், 49, பூவன் தார், 700, ரஸ்தாளி, 800, தேன்வாழை, 780, செவ்வாழை, 1,020, ரொபஸ்டா, 510, பச்சைநாடன், 570, மொந்தன் தார், 360 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் ஐந்து லட்சத்து, 65 ஆயிரத்து, 439 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை