உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மருத்துவ காப்பீடு குளறுபடி; அரசு ஓய்வூதியர்கள் தர்ணா

மருத்துவ காப்பீடு குளறுபடி; அரசு ஓய்வூதியர்கள் தர்ணா

ஈரோடு: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன், தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார் கோரிக்கை குறித்து பேசினர்.புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஓய்வூதியர்கள் அனுப்பும் மனுக்கள் மீது காப்பீடு நிறுவனம், கருவூல கணக்கு ஆணையர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை. சரியான வழிகாட்டுதல் இன்றி, மருத்துவ காப்பீடு தொகையை முழுமையாக பெற இயலாமல், ஓய்வூதியர் மிகுந்த சிரமப்படுகின்றனர். அத்துடன் பொருளாதார இழப்பையும் சந்திக்கின்றனர். எனவே, முழுமையாக செலவுத்தொகையை பெற்றிட காசு இல்லாத மருத்துவம் என்ற அரசின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ