உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு அந்தியூர் அருகே போராட்டம்

சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு அந்தியூர் அருகே போராட்டம்

அந்தியூர்:அந்தியூர் அருகே அண்ணமார்பாளையத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை, அப்பகுதி மக்கள் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். சில நாட்களாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சுடுகாட்டை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதற்காக, பழமையான மரங்களை வெட்டி, சமன் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணமார்பாளையத்தை சேர்ந்த, 20௦க்கும் மேற்பட்ட மக்கள், சுடுகாட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் வருவாய் துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 'மயானத்தை, 200 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது தனி நபர் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்' என்று மக்கள் வலியுறுத்தினர். 'தேர்தல் முடிந்த பிறகு ஆக்கிரமிப்பு அகற்றப்படும்' என்று அதிகாரிகள் கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி