உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தரமற்ற தார்ச்சாலையை சுடச்சுட எதிர்த்த மக்கள் பெருந்துறையில் தில்லா நடந்த தில்லுமுல்லு

தரமற்ற தார்ச்சாலையை சுடச்சுட எதிர்த்த மக்கள் பெருந்துறையில் தில்லா நடந்த தில்லுமுல்லு

பெருந்துறை, பெருந்துறை நகராட்சிக்கு உட்பட்ட எட்டாவது மற்றும் ஒன்பதாவது வார்டுகள் பகுதியில், பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து ஜெ.ஜெ.நகர் வரை, 2.6 கி.மீ., துாரம் தார்ச்சாலை, 1.37 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணி, நேற்று காலை தொடங்கியது. சிறிது நேரத்தில், ௧ கி.மீ., துாரத்துக்கு சாலை அமைத்து முடித்தனர். இதனால் மக்கள் சந்தேகம் அடைந்தனர். தரமற்ற முறையில் பணி நடப்பதை அறிந்து ஆவேசம் அடைந்தனர். மக்களின் எதிர்ப்பால் நகராட்சி தலைவர் ராஜேந்திரன், கமிஷனர் புனிதன் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அவசரகதியில் தரமற்று அமைத்த சாலையை அகற்றப்பட்டு, மீண்டும் அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து இரண்டு வார்டுகளையும் சேர்ந்த மக்கள் கூறியதாவது: ஒரு கி.மீ., துாரத்துக்கான சாலையை, 2 மணி நேரத்தில் போட்டு விட்டனர். பழைய சாலையை கொத்தி எடுக்கவில்லை. சாலையின் உயரம், 5 செ.மீ., இருக்க வேண்டும். ஆனால், ௧ செ.மீ., உயரம் மட்டுமே இருந்தது. அதுவும் பழைய சாலை மீது தார் ஊற்றாமல், புதிய சாலை அமைத்தனர். தார் மற்றும் ஜல்லி கலந்து போட்டு அவசர கதியில் அமைத்தனர். உரிய விதிகளுடன் பழைய சாலையை கொத்திவிட்டு, முறையாக சாலை அமைக்கப்பட வேண்டும். இல்லையேல் எத்தனை முறை போட்டாலும் எதிர்ப்பு கிளம்பும். சாலை அமைக்க விட மாட்டோம். இவ்வாறு மக்கள் கூறினர்.எட்டாவது வார்டு கவுன்சிலராக தி.மு.க.,வை சேர்ந்த காமராஜ், ஒன்பதாவது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.,வை சேர்ந்த வளர்மதி உள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் தலைவர், கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இவர்களும் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !