உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகா முனியப்பன் கோவிலில் பொங்கல் விழா

மகா முனியப்பன் கோவிலில் பொங்கல் விழா

அந்தியூர்:அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற மகா முனியப்பன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் திருவிழா கடந்த மாதம், 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் முதல் வன பூஜை நடந்தது. இதற்காக மடப்பள்ளியில் இருந்து, ௨ கி.மீ., துாரத்துக்கு, முனியப்பன், பெருமாள், காமாட்சியம்மன் சுவாமி வைக்கப்பட்ட சிறு தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து கோவிலுக்கு கொண்டு வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று காலை மூன்று தேர்களும் மடப்பள்ளிக்கு திரும்பின.இந்நிகழ்வில் அந்தியூர், செம்புளிச்சாம்பாளையம், சின்ன பருவாச்சி, காட்டுப்பாளையம், ஒட்டபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 6ம் தேதி மறு பூஜை நடக்கிறது. அன்றைய நாளில் மூன்று சுவாமிகளும், 60 அடி மகமேரு தேரில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். பால் பூஜையுடன் விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி