உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

ஈரோடு : கிறிஸ்தவ மக்களின் தவக்காலத்தின் கடைசி ஞாயிறுக்கிழமை, குருத்தோலை ஞாயிறாக அனுசரிக்கப்படுகிறது. தவக்காலம் என்பது சாம்பல் புதனில் தொடங்கி, 40 நாள்கள் உபவாசம் கடைப்பிடிக்கப்பட்டு, கடைசி வாரம் பரிசுத்த வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.அந்த வகையில் நேற்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, ஈரோட்டில் ப.செ.பூங்கா பகுதியில் அமைந்துள்ள புனித அமல அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ., தேவாலயத்தை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள், கைகளில் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.* அந்தியூரில் சி.ஐ.ஜி., மிஷன் தேவாலயம் சார்பில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலையில் செய்யப்பட்ட சிலுவையை ஏந்தி, பாடல்களை பாடியபடி, தவிட்டுப்பாளையம், சிங்கார வீதி, பர்கூர் சாலை உள்ளிட்ட பிரதான சாலை வழியாக சென்று, தேவாலயத்தை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை