உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு கலை கல்லுாரியில் தர மதிப்பீட்டுகுழு ஆய்வு

அரசு கலை கல்லுாரியில் தர மதிப்பீட்டுகுழு ஆய்வு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தேசிய தரமதிப்பீட்டு குழுவினர், கல்வித்தரம், உள்கட்டமைப்பு குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். ம.பி., மாநில தேவி அகல்யா பல்கலை முன்னாள் இணைவேந்தர் அசோக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். இரு நாட்கள் நடந்த ஆய்வில், முதல் நாளில் கல்லுாரி முதல்வர் ராதாகி-ருஷ்ணன், கல்லுாரி செயல்பாடு, கற்றல், கற்பித்தல் முறை, தேர்ச்சி சதவீதம் குறித்து விளக்கினார். கல்லுாரி அடிப்படை வசதி, உள்தர மேம்பாடு, கற்றல் கற்பித்தல் முறைகளை மேம்ப-டுத்தும் எதிர்கால திட்டங்கள் குறித்து கல்லுாரி உள்தர உறுதிய-ளிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் பொங்கியண்ணன் விளக்-கினார். இரண்டாம் நாளில் வல்லுனர் குழு கல்லுாரியின் அனைத்து அடிப்படை கூறுகளையும், மதிப்பீடுகள் செய்து அறிக்கை தயாரிக்கும் பணி நடநத்து. கல்லுாரி முதல்வர், உள்தர உறுதியளிப்பு மைய ஒருங்கிணைப்பாளரிடம் நேர்காணல் நடந்-தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ