| ADDED : டிச 05, 2025 10:00 AM
ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம், இரண்டு நுழைவு பகுதிகளை கொண்டது. மேல் பாலத்தில் இலகு ரக வாகனங்களும், கீழ் பாலத்தின் வழியாக கனரக வாகனங்களும் செல்கின்றன. கடந்த அக்., முதல் கீழ்பாலத்தில் செல்லும் மழைநீர் வடிகால் அமைப்பு அடிக்கடி சேதமாவதும், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணி நடப்பதும் வாடிக்கையாக உள்-ளது. கடைசியாக கடந்த நவ.,7ம் தேதி வடி-காலின் கான்கிரீட் தளம் பெயர்ந்து, குழாய் சேத-மாகி மழைநீருடன் கலந்த கழிவுநீர் சாலைகளில் வெளியேறியது. சீரமைக்கப்பட்ட நிலையில் தற்-போது நான்காவது முறையாக வடிகால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பகலில் மட்டு-மின்றி இரவிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, ரயில்வே நுழைவு பாலத்தில் அதிகா-ரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் கூறியதாவது: நுழைவு பாலத்தில் கழிவுநீர் இரண்டு வழியாக கடக்கி-றது. இதில் மேல் பகுதி வழியாக வரும் கழிவு-நீரை மாற்று வழியில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையின் குறுக்கே வடிகால் செல்லும் இடத்தில் இரும்பு பிளேட் அல்லது வாகனத்துக்கு இடையூறு ஏற்படாத விதமாக வடிகாலின் இரு-பக்கமும் சிறு வேகத்தடை அமைத்து நடுவில் வடிகால் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இது தொடர்பாக அனுமதி பெறுதல் போன்ற எந்த உதவியாக இருந்தாலும் செய்து தரு-கிறேன். கால தாமதமின்றி பணிகளை விரை-வாக தொடங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.