உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உலக நன்மைக்காக சகஸ்ர கலசாபிஷேகம்

உலக நன்மைக்காக சகஸ்ர கலசாபிஷேகம்

பவானி: மகாசிவராத்திரியை முன்னிட்டு, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக சகஸ்ர கலசாபிஷேக பெருவிழா நேற்று நடந்தது. இதன்படி ஒரே நேரத்தில் சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆதிகேசவ பெருமாள் சுவாமிகளுக்கு, 1,008 கலசாபிஷேக பூஜை நடந்தது. இதேபோல் சண்முக சுப்பிரமணிய சுவாமிக்கு, அஷ்டோத்ர கலசாபிஷேகம் நடந்தது.முன்னதாக இந்நிகழ்வு கடந்த, 5ம் தேதி முதல் கால யாக பூஜையுடன் துவங்கயது. நேற்று காலை நான்காம் கால பூஜையை தொடர்ந்து மகா பூர்ணாகுதி நடந்தது. இதன் பிறகு கலசாபிஷேகம் நடந்தது.ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57வது குரு மகா சன்னிதானம் சிவஸ்ரீ சரவணமாணிக்க சுவாமிகள் மற்றும் பிள்ளையார்பட்டி பாடசாலை முதல்வர் பிச்சை சுவாமிகள் அபிஷேகத்தை நடத்தினர். இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ