உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு சிலவரி செய்திகள்

ஈரோடு சிலவரி செய்திகள்

ரூ.1 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 1,299 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 90.10 ரூபாய், குறைந்தபட்சம், 60.20 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 1.௦௭ லட்சம் ரூபாய்க்கு விற்றது. ஏலத்தில், 37 விவசாயிகள் பங்கேற்றனர்.ரூ.89.40 லட்சத்துக்கு எள் விற்பனைஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 975 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் ஒரு கிலோ, 117.42 ரூபாய் முதல், 145.9௦ ரூபாய்; சிவப்பு ரகம், 117.23 ரூபாய் முதல், 139.63 ரூபாய்; வெள்ளை ரகம், 137.9௦ ரூபாய் வரை விற்றது. மொத்தம், 72,840 கிலோ எள், 89 லட்சத்து, 40,236 ரூபாய்க்கு விற்பனையானது.வீட்டில் நகை திருட்டுபவானி: சித்தோடு அருகே உள்ள மாரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுமதி, 50; கணவன் இறந்து விட்டதால், திருமணமான தனது மகளுடன் வசித்து வருகின்றார். காலிங்கராயன்பாளையத்தில் உள்ள தாயாரை பார்க்க சென்றார். பிறகு மகள், பேரனுடன் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, 6.50 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிந்தது. இதில்லாமல் வெள்ளி அரைஞாண், மூன்று பித்தளை குடங்களையும் காணவில்லை. சுமதி புகாரின்படி சித்தோடு போலீசார், களவாணியை தேடி வருகின்றனர். மனைவியுடன் கள்ளக்காதல்கள்ளக்காதலனுக்கு வெட்டுதாராபுரம்,-தாராபுரத்தை அடுத்த ஐயப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 37; இவரின் மனைவி பரமேஸ்வரி, 35; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி, 37, என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது. இதை மோகன்ராஜ் கண்டிக்கவே, இரு மாதங்களாக தாயார் வீட்டில் பரமேஸ்வரி வசித்து வந்தார். நேற்று முன்தினம் பரமேஸ்வரிக்கு, மோகன்ராஜ் போன் செய்தார். போன் பிஸியாக இருந்ததால், சந்தேகமடைந்து மூர்த்திக்கு போன் செய்தார். அதுவும் பிசியாக இருந்ததால் ஆத்திரம் அடைந்தார். உடனடியாக மூர்த்தி வீட்டுக்கு சென்றார். அவர் கையில் இருந்த செல்போனை வாங்கி பார்த்த போது, பரமேஸ்வரியுடன் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், வீட்டில் கிடந்த அரிவாள் மனையை எடுத்து, மூர்த்தி தலையில் வெட்டினார். இதில் மூர்த்தி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குண்டடம் போலீசார் மோகன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை