உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதல்வர் வருகையால் 26ல் சில டாஸ்மாக் கடைக்கு லீவு

முதல்வர் வருகையால் 26ல் சில டாஸ்மாக் கடைக்கு லீவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வருகையால், அரசு டாஸ்மாக் மற்றும் எப்.எல்.2 தனியார் மது கடைகளில் நாளை மது விற்பனை நடக்காது.இதன்படி சோலார் பாலதண்டாயுதபாணி நகர், அசோகபுரம், ஆணைக்கல்பாளையம், பூந்துறை, அரச்சலுார், வடபழனி பகுதி டாஸ்மாக் கடைகள் அன்று அதிகாலை, 12:00 முதல் மதியம், 2:00 மணி வரையும், கனிராவுத்தர் குளம், சூளை, குப்பக்காடு, ஓடக்காடு பெரந்துறை ரோடு, குமிளாம்பரப்பு கடை மதியம், 2:00 மணி முதலும், ஆவின் டைரி எதிரில், பவானி மெயின் ரோடு, ராயபாளையம் புதுார் கடை நாள் முழுவதும், இயங்காது.சித்தோடு ராயபாளையம் மில்லியன் டாலர் ரெக்ரியேஷன் கிளப் தனியார் மதுக்கடை அன்று மதியம் முதல் முதல்வர் விழா முடியும் வரை மூடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை