உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் இறங்கி போராட்டம்

வாய்க்காலில் இறங்கி போராட்டம்

கோபி: கோபி அருகே நாகதேவன் பாளையத்தில், கீழ்பவானி வாய்க்காலில், கான்கிரீட் சுவர் அமைக்க, பொதுப்பணித்துறை சார்பில், நேற்று மாலை பணிக்கு ஆயத்தமாயினர். இதையறிந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், பணியை தடுத்து நிறுத்தி, வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: கீழ்பவானி வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆக.,15ல், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த முறை கான்கிரீட் திட்டத்தினால், முறை-யாக தண்ணீர் கிடைக்காமல், பல்வேறு இன்னல்களால் நஷ்-டத்தை சந்தித்தோம். இப்பகுதியில் கசிவுநீர் திட்டம் உள்ள பகு-தியில் கான்கிரீட் போடுவதால், விவசாயம் மட்டுமின்றி பல கிரா-மங்களின் குடிநீராதாரம் பாதிக்கிறது. இதை பாசன விவசாயிகள் சார்பில் கண்டிக்கிறோம். இவ்வாறு கூறினர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் சிறுவலுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை