உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெற்றோர் பைக் வாங்கி தராததால் டீன்-ஏஜ் வாலிபர் விபரீத முடிவு

பெற்றோர் பைக் வாங்கி தராததால் டீன்-ஏஜ் வாலிபர் விபரீத முடிவு

கோபி: கவுந்தப்பாடி அருகே சின்னபுலியூரை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன், 18; ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர். கோவில் திருவிழாக்களில் டிரம்ஸ் அடிக்கும் வேலைக்கு சென்று வந்தார். வேலைக்கு செல்ல வசதியாக பெற்றோரிடம் பைக் கேட்டு வந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து வாங்கி தருவதாக கூறியுள்-ளனர்.கடந்த, 28ம் தேதி வேலைக்கு சென்று திரும்பிய மகனிடம், பெற்றோர் கூலிப்பணம் கேட்டுள்-ளனர். அவரோ, பைக் வாங்கி தந்தால்தான், பணம் தருவேன் என்று கூற, விரைவில் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் வீட்டு படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் ஈஸ்வரி புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்