உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிச்சைக்காரன் பள்ளம் ஓடை துார்வாரும் பணி மும்முரம்

பிச்சைக்காரன் பள்ளம் ஓடை துார்வாரும் பணி மும்முரம்

ஈரோடு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்படி மாநகரில் உள்ள ஓடை, கால்வாய்களை துார்வார ஆணையர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.இதை தொடர்ந்து பிச்சைக்காரன் பள்ளம் ஓடை துார்வாரும் பணி தொடங்கி நடக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:முதலித்தோட்டம் பகுதியில் இருந்து சூளை வரை, சூளையில் இருந்து பவானி ரோடு வரையிலான பிச்சைக்காரன் பள்ளம் ஓடை துார்வாரும் பணி தற்போது நடக்கிறது. இதுவரை, ௧௦ கி.மீ., துாரத்துக்கு துார்வாரும் பணி நடந்துள்ளது.இதேபோல் நான்காவது மண்டலம் கட்டபொம்மன் வீதி, சாஸ்திரி நகர் பகுதியிலும் துார்வாரும் பணி நடக்கிறது.இதுதவிர கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் செல்லும் கால்வாய்களும் சுத்தம் செய்யப்படுகிறது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி