உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

600 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ஈரோடு: ஆசனுார் போலீஸ் எல்லை, காரப்பள்ளம் பகுதியில், ரேஷன் அரிசி கடத்துவதாக, ஈரோடு மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தக வல் கிடைத்தது. இதைய டுத்து இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், எஸ்.ஐ., மூர்த்தி உள்ளிட்ட போலீச ார், காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது வந்த ஒரு வேனில், 12 மூட்டைகளில், 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.அரிசியை கடத்தி வந்த, பழைய ஆசனுார் பகுதி சிவகுமார், 33, என்பவரை கைது செய்து, அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்