உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிதி நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் திருட்டு

நிதி நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் திருட்டு

ஈரோடு: பெரிய சேமூர், ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். ஈரோடு, திரு.வி.க. வீதி நேதாஜி நகரில், ஸ்ரீஜெய் சாய்ராம் பெயரில் பைனான்ஸ், சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ஏலச்சீட்டு வசூல் பணத்தை பைனான்ஸ் அலுவலகத்தில், கடந்த, 5ம் தேதி மதியம் வைத்து விட்டு சாப்பிட சென்று விட்டார்.மாலையில் திரும்பி வந்தபோது பைனான்ஸ் கண்ணாடி கதவை நெம்பி, தாழ்ப்பாளை உடைத்து டிராயரில் வைத்திருந்த, 1.40 லட்சம் ரூபாய் திருட்டு போய் விட்டது. அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், களவாணியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ