உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாளவாடியில் சூறாவளி காற்றுடன் மழை ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்

தாளவாடியில் சூறாவளி காற்றுடன் மழை ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்

தாளவாடி :தாளவாடி மலையில் சிக்கள்ளி, சூசைபுரம், திகினாரை, அருள்வாடி, கொங்கள்ளி மற்றும் ஆசனுார் சுற்று வட்டார பகுதிகளான தலமலை, அரேபாளையம், நெய்தாளபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரம் அதே வேகத்தில் பெய்த நிலையில் படிப்படியாக குறைந்தது. மழையுடன் பல இடங்களில் பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதனால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.குறிப்பாக சூசையபுரம், திகினாரை, பனஹள்ளி கிராமங்களில் பலத்த சூறைக்காற்றால், ௫,௦௦௦க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமாகி விட்டதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மின்னல் தாக்கி மாடு பலிதாளவாடி அருகே திகினாரை, மல்குத்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவண்ணா. நேற்று மாலை அப்பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில், தோட்டத்தில் கட்டியிருந்த ஒரு பசு மாடு பலியாகி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்