உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்று முத்து மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

இன்று முத்து மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

ஈரோடு : ஈரோடு, நாராயணவலசு, திருமால்நகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம், 27-ம் தேதி இரவு தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு நேற்று சென்று தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இன்று காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி, 9:௦௦ மணிக்கு காளி பூஜை நடக்கிறது. மதியம் பொங்கல் விழா, மாலையில் மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் திருவீதியுலா நடக்கிறது. இரவில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ