| ADDED : மார் 03, 2024 01:47 AM
ஈரோடு;ஈரோட்டில், மாநில திட்டக்குழு - வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில், வட்டார வளர்ச்சி யுக்தி அறிக்கை தயாரிப்பு குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நடந்தது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். மாநில அளவில் சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், 187 வளர்ச்சி குறிக்காட்டிகளின் அடிப்படையில், மாநிலத்தில், 50 பின்தங்கிய வட்டாரங்களை தெரிவு செய்து, 'வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம்' என்ற புதிய திட்டத்தை மாநில திட்டக்குழு மூலம் அரசு செயல்படுத்துகிறது.ஈரோடு மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ், நம்பியூர் வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அங்கு நன்கு செயல்படுத்த தேவையான யுக்திகள், பணிகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினர்.இப்பயிற்சியில் ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், சேலம் உட்பட ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்றனர்.பயிற்சி உதவி கலெக்டர் வினய்குமார், மாவட்ட பஞ்சாயத்து செயலர் சாலமோன், மாநில திட்டக்குழு வளர்ச்சி பிரிவு தலைவர் செல்வகுமார், உறுப்பினர் விஜயபாஸ்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.