உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு அரசுகள் உதவ வலியுறுத்தல்

ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு அரசுகள் உதவ வலியுறுத்தல்

ஈரோடு: ஈரோடு இந்து முன்னணி நடத்தும், 36வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் கிஷோர் குமார் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொது செயலாளர் கார்த்தி முன்னிலை வகிக்கிறார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சங்கர், ரமேஷ், வக்கீல் முரளி, மாவட்ட அமைப்பாளர் முருகன், செயற்குழு உறுப்பினர் சுதீஷ், கவின் மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.மத்திய, மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி, ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு உதவி, வருவாய் மற்றும் வேலை இழப்பை தடுத்திட வேண்டும்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்டத்தில், 1,008 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படுகிறது. இந்து முன்னணி மாநில தலைவரை கொல்ல 10 பேர் கொண்ட கும்பலுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் உண்மையை மூடி மறைக்கு முற்பட்டுள்ளனர். உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து, வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி